Friday, 2 March 2012

Arasar Kovil Sundara Mahalakshmi Kovil

இந்த அற்புத வலைப்பதிவின் முதல் பதிவை அக்ஷய விநாயகரின் பொற்பாதம் தொட்டு தொடங்குகிறேன். 
 



அரசர் கோவில் சுந்தர மகாலட்சுமி சமேத கமல வரதராஜர் கோவில் :
வணக்கம். இந்த வலைப்பதிவின் மூலம் உங்களுடன் அரசர் கோவில் சுந்தர மகாலட்சுமி கோவிலின் பெருமைகள் பற்றிய தகவல்களை பரிமாறி கொள்வதில் சந்தோஷம் அடைகிறேன்.

இந்த கோவில் மிக பழைமையான கோவிலாகும். இந்த கோவிலை விஜய நகர பேரரசின் மன்னர்கள் புதுப்பித்தனர் என்பதிலிருந்து, இதன் பழமை உங்களுக்கு விளங்கும். 

கோவிலுக்கு செல்லும் வழி:

செங்கல்பட்டில் இருந்து மதுராந்தகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள படாளம் கூட்டுரோட்டில் இடதுபுறம் திரும்பி 4 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். படாளம், புளிப்பரகோவில் ஆகிய ஊர்களுக்கு அடுத்தது அரசன் கோவில்.







கோவிலின் சிறப்புகள்:

சுக்கிர ஸ்தலம்:
  • இந்த கோவிலில் உள்ள மகாலட்சுமிக்கு, அவரது வலது காலில் ஆறு விரல்கள் இருக்கும்.ஆறு விரல்கள் இருப்பதை அதிர்ஷ்டம் என்பார்கள். எனவே இந்த லக்ஷ்மியை தொழுதால் வாழ்வில் எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும் என்பது நம்பிக்கை. ஆறு என்பது சுக்கிரனை குறிக்கும் எண்ணாகும். ஆகையால் இந்த லக்ஷ்மியை வணங்கினால் சுக்கிரனின் அருள் கண்டிப்பாக கிடைக்கும். 
  • இந்த மகாலட்சுமி செல்வங்களுக்கு அதிபதி. ஆகவே இந்த லக்ஷ்மியை வணங்கினால் அவரது வாழ்க்கை செல்வசெழிப்போடு விளங்கும்.
  • இந்த மகாலட்சுமி சகல சௌபாக்கியங்களை அருள்பவள். இந்த லக்ஷ்மியை வெள்ளிகிழமையில் சுக்கிர ஓரையில் அதாவது காலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளாக தரிசிப்பவர்கள் சகல சௌபாக்கியங்கள் பெற்று, வாழ்க்கைக்கு தேவையான செல்வங்கள் பெற்று, சுக்கிரனின் அருள் பெற்று வாழ்வார்கள்.

 தாய் மகாலட்சுமி:

  • இந்த கோவில் எழுந்தருளியுள்ள சுந்தர மகாலட்சுமி அன்னை ராஜ ராஜேஸ்வரியின் தாயாக கருதப்படுகிறார்.
  •  அன்னை ராஜ ராஜெஸ்வரிக்கே தாயாய் கருதபடுகிற மகாலட்சுமி, உலக உயிர்கள் அனைத்துக்கும் தாய் ஆவாள்.
   பித்ரு தோஷ பரிஹார ஸ்தலம்:

  • இந்த கோவிலின் அருகில் ஓடும் பாலாறு வடக்கு தெற்காக ஓடுகிறது.  எனவே இந்த கோவிலில் நடத்தபெறும் பித்ரு தோஷ பரிஹர்ர பூஜையில் கலந்து கொண்டால், நம்முடைய பித்ரு தோஷம் விலகி, பித்ருக்களின் ஆசியை நாம் பெறலாம். 
   கல்யாண தடை நீங்க, பிள்ளை பேறு பெற வணங்க வேண்டிய ஸ்தலம்:

  • இந்த கோவிலின் மகாலட்சுமி மண்டபத்திலுள்ள கோமுகத்திற்கு தொடர்ந்து 6 வெள்ளிகிழமைகளில் சுக்கிர ஓரையில் ( காலை 6 மணி முதல் 7 மணிக்குள்) தூய நீரால் கழுவி, மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, பூ சூடி, வெற்றிலை பாக்கு பழம் வைத்து எண்ணிய காரியம் நிறைவேற மனதால் வேண்டி வணங்கினால், 6 வாரத்திற்குள் நல்ல செய்தி வரும். இது கண் கண்ட உண்மை.





No comments:

Post a Comment